கன்னடப் படத்தில் நடிக்கிறார்…த்ரிஷா…

trishaதமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி பின்னர் தெலுங்கிலும் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இடம் பிடித்தவர் த்ரிஷா.

இவர் ஹீரோயினாக அறிமுகமாகி பத்து ஆண்டுகள் ஆனாலும், இதுவரை தமிழ், தெலுங்கு, ஹிந்திப் படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

இப்போது முதன் முறையாக ஒரு கன்னடப் படத்தில் நடிக்கப் போகிறார்.

கன்னடத் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருக்கும் புனித் ராஜ்குமார் ஜோடியாக நடிக்க உள்ளார்.

அடுத்த மாதம் ஆரம்பமாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு மாதங்களில் முடிய உள்ளதாம்.

த்ரிஷா நடித்து அடுத்து தமிழில் ‘என்றென்றும் புன்னகை’ திரைப்படம் அடுத்த வாரமும், அதன் பின் சில வாரங்கள் கழித்து ‘பூலோகம்’ திரைப்படமும் வெளியாக உள்ளது.

எங்க ஊர் அழகு தேவதைகளையெல்லாம் அழைக்கிறாங்க…ஆனால், காவிரி தேவதையை தர மட்டும் அவ்வளவு யோசிக்கிறாங்க…

Read Previous

‘வீரம்’ வெற்றி பெற அஜித் ‘மொட்டை’ அடித்துள்ளார்…

Read Next

‘ஒரு ஊர்ல’ ஒரு ராஜா..அது இளையராஜா…