‘ஒரு ஊர்ல’ ஒரு ராஜா..அது இளையராஜா…

ilaiyaraja oru oorlaவிக்னேஷ் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக பி.வேலுச்சாமி தயாரிக்கும் படம் “ஒரு ஊர்ல”.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னை, பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது.

விழாவில் பேசிய அனைவரும் இளையராஜாவை வாழ்த்திப் பேசினார்கள். ‘ஒரு ஊர்ல…ஒரு ராஜா’  தான், அது என்றுமே இளையராஜா’ தான் என்பதே அவர்கள் அனைவரின் பேச்சிலும் எதிரொலித்தது.

விழாவில் இளையராஜா பேசும் போது,

“ஒரு ஊர்ல’ படத்தை முழுவதும் பார்த்த பிறகுதான் இசையமைத்தேன். ஒவ்வொரு காட்சியும் சிறப்பாக இருந்ததால் என்னால் நிறைவாக இசையமைக்க முடிந்தது. எந்த படத்திற்கும் நான் மூன்று நாட்களுக்கு மேல் இசையமைத்தது இல்லை.

அது நூறு நாள் படமானாலும் சரி, வெள்ளி விழா படமானாலும் சரி, மூன்று நாட்களுக்கு மேல் என் ஸ்டுடியோவில்  அந்த படம் இருந்ததில்லை.

அந்த காலத்திலிருந்தே நிறைய புதுமுக இயக்குனர்களுக்கு எனது பெயர் பயன்பெற்று இருக்கிறது. ஒரு சிலர் என்னிடம் வந்து ஏன் அவர்களுக்கு எல்லாம்  இசை அமைக்கிறீர்கள் என்று கேட்பார்கள். அதற்கு நான்,  நீ வந்தது மாதிரி அவன் வந்து விட்டு போகட்டுமே என்று சொல்வேன். உனக்கு உண்டான இடம் உனக்கு,  அவனுக்கு உண்டான இடம் அவனுக்கு என்பேன்.

புதியவர்களுக்கு என்றுமே நான் இசையமைக்க மறுத்ததில்லை புதியவர்களே வாருங்கள் நான் இருக்கிறேன், என்று இளையராஜா பேசினார்.

மற்றும் இந்த விழாவில் கவிஞர் மூ.மேத்தா, இயக்குனர்கள் பாலு மகேந்திரா, பாலாஜி சக்திவேல், ரத்தினகுமார், விஜய்மில்டன், தயாரிப்பாளர் சங்க பொருளாளர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் பேசினார்கள். படத்தின் நாயகன் வெங்கடேஷ், கதாநாயகி நேஹா பட்டீல், ‘நான்கடவுள்’ முரளி, பேபி சௌந்தர்யா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் படத்தின் தயாரிப்பாளர் வேலுச்சாமி வரவேற்றார்.

இயக்குனர் கே.எஸ்.வசந்தகுமார் நன்றி தெரிவித்தார்.

 

Read Previous

கன்னடப் படத்தில் நடிக்கிறார்…த்ரிஷா…

Read Next

இவன் வேற மாதிரி – விமர்சனம்