‘தனுஷ் 5ம் வகுப்பு படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளவர் சாம் டி. ராஜ்.
லண்டன் டிரிடினட்டி கல்லூரியில் ‘8th Grade Pianist’ முடித்திருக்கிறார். இவர் துபாயில் இசையமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார். Jazz Music – ல் நிறைய நிகழ்ச்சிகளை செய்துள்ளார்.
இரானியன், எகிப்து, துருக்கி, அரபிக், ஸ்பானிஷ் உட்பட பல மொழி ப் படங்களில் இணை இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.
‘தனுஷ் 5ம் வகுப்பு’ படத்தில் 6 பாடல்கள் உள்ளன. யுகபாரதி, விவேகா, மோகன்ராஜ் மற்றும் அறிமுக பாடலாசிரியர் மீனாட்சிசுந்தரம் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளார்கள்.
ராகுல் நம்பியார், கிருஷ்ணா அய்யர், சைந்தவி, மாளவிகா, லதா, ஆகியோர் பாடியுள்ளனர். ‘சன் சிங்கர்’ மாஸ்டர் ஹேம்நாத் இப்படத்தின் மூலம் பாடகராக அறிமுகம் ஆகிறார்.
“தொடர்ந்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் பாடல்களை இசையமைக்க விரும்புவதாக”, சாம் கூறுகிறார்.
விதார்த் நடிக்கும் ‘காட்டுமல்லி’, மற்றும் ஒளிப்பதிவாளர் கோபிநாத் தயாரிக்கும் ‘தேரடி வீதி திருக்கண்ணபுரம்’ ஆகிய படங்களுக்கு தற்போது இசையமைத்து இருக்கிறார்.
அனைத்து மக்களுக்கும் இவரது இசை சென்று சேர வாழ்த்துகள்…