‘புறம்போக்கு’ படத்தில் கார்த்திகா…

karthikaஜெயம் ரவி நடித்த ‘பேராண்மை’ படத்திற்குப் பிறகு எஸ்.பி.ஜனநாதன் இயக்க உள்ள படம் ‘புறம்போக்கு’.

இப்படத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி முதன் முறையாக இணைந்து நாயகர்களாக நடிக்க உள்ளனர்.

இப்படத்தில் நாயகியாக நடிக்க ‘கோ’ படத்தில் அறிமுகமான கார்த்திகா நடிக்க உள்ளார். அந்த படத்திற்குப் பிறகு பாரதிராஜா இயக்கத்தில் ‘அன்னக்கொடி’ படத்தில் நடித்தார். அந்த படம் கார்த்திகாவை நிறையவே ஏமாற்றி விட்டது.

தற்போது அருண் விஜய் ஜோடியாக ‘டீல்’ படத்தில் நடித்து வருகிறார்.

அறிமுகமான படம் வெற்றி பெற்றாலும் தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு இல்லாமல் இருக்கும் கார்த்திகா இந்த படம் தனக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கிறார்.

கலைப்படாதீங்க…‘புறம்போக்கு’ மூலமா தமிழ் சினிமாவுல ‘பட்டா’ போட்டுடலாம்…

Read Previous

துபாயிலிருந்து வந்துள்ள இசையமைப்பாளர்…

Read Next

ரஜினியின் அடுத்த படம்…உலா வரும் வதந்தி…

Most Popular