இன்றைய ரிலீஸ் – 3 படங்கள்…

இன்று ஜனவரி 10ம் தேதி வெளியாகும் இரு முக்கிய படங்களைப் பற்றி நாம் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. இருந்தாலும் நம் கடமையிலிருந்து சிறிதும் தவறாமல் இந்த செய்தியையும் எழுதுகிறோம்.

வீரம்

veeram 0214_00001

விஜயா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் அஜித், தமன்னா, சந்தானம் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

ஜில்லா

jilla 0714_00013

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஆர்.டி. நேசன் இயக்கத்தில் டி.இமான் இசையமைப்பில் விஜய், மோகன்லால், காஜல் அகர்வால், சூரி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

முன் அந்தி சாரல்

mun-anthi-saaral

ஃபோகஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் தேவேந்திரன் இயக்கத்தில் யூதா ஷாலோம் இசையமைத்துள்ள படம். அன்சார், ஆனந்த், முரளி, நட்சத்திரா, சங்கவி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

கடந்த வெள்ளியன்று வெளிவரவேண்டிய இந்த படம் இன்றுதான் வெளியாகிறது. அதே போல், ‘அம்மா அம்மம்மா’ படம் கடந்த வெள்ளியன்று வெளியாகவில்லை. இப்படம் இம்மாதக் கடைசியில் வெளிவரும் எனத் தெரிகிறது.

Read Previous

சிவகார்த்திகேயனின் ‘எங்க வீட்டுப் பிள்ளை’…

Read Next

காதலர் தினத்தில் ‘இது கதிர்வேலன் காதல்’