அவங்களும் ‘ட்ரிம்’ பண்றாங்களாம்…

jilla 0714_00015‘ஜில்லா’ படத்தைதானே 10 நிமிடம் குறைச்சி ‘ட்ரிம்’ பண்ணியிருக்காங்க…அவங்களும்னு சொன்ன உடனே ‘வீரம்’ படத்தையும் ட்ரிம் பண்றாங்களான்னு யாரும் தப்பா நினைச்சிக்க வேணாம்.

இந்த அவங்க…ஆந்திரா அவங்க…ஆந்திராவுல நம்ம விஜய் மாதிரி மாஸ் ஹீரோவா இருக்கிற ஹீரோ மகேஷ் பாபு. இவர் நடிச்ச படங்களோட ரீமேக்கை இங்க தமிழ்ல பண்ண விஜய் எப்பவுமே ஆர்வமா இருப்பாரு. அதுக்கு உதாரணம் ‘கில்லி.’

மகேஷ் பாபு நடிச்சி  அதே ஜனவரி 10ம் தேதி ஆந்திராவுல வெளியாகியிருக்கிற படம் ‘1 நேநொக்கடைன்’.

‘ஜில்லா’ படம் மாதிரியே அந்த படமும் முதல் நாள் ஓபனிங் சூப்பரா இருந்துச்சாம். ஆனால், படத்தோட நீளத்தைப் பத்தி அவரோட ரசிகர்கள் ரொம்பவே குறைபட்டாங்களாம்.

அதனால, 20 நிமிடக் காட்சிகளை குறைச்சிட்டாங்களாம். ஆனால், இங்க ‘ஜில்லா’வுல 10 நிமிடம்தான் குறைச்சிருக்காங்க.

அப்படியும் படம் 2 மணி நேரம் 50 நிமிடம் ஓடுது. இன்னும் 20 நிமிடம் குறைச்சி 2 மணி நேரம் 30 நிமிடமா இருந்தால் நல்லா இருக்கும்னு ரசிகர்கள் ஃபீல் பண்றாங்க….

செய்வாங்களா….

Read Previous

`ஜில்லா’ – பாடல் நீக்கம்…ரசிகர்கள் அதிருப்தி…

Read Next

அனைத்து திரையரங்குகளிலும் ‘ஹவுஸ் ஃபுல்’ காட்சிகள்…