அனைத்து திரையரங்குகளிலும் ‘ஹவுஸ் ஃபுல்’ காட்சிகள்…

thala-thalapathyதமிழ்நாட்டில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக அமைந்து, ஏறக்குறைய அனைத்து திரையரங்குகளிலும் ‘ஹவுஸ் ஃபுல்’ என போர்டுகள் தொங்குகின்றன.

பொங்கலுக்கு நான்கு நாட்கள் முன்னதாகவே அஜித் நடித்த ‘வீரம்’, விஜய் நடித்த ‘ஜில்லா’ ஆகிய இரண்டு படங்களும் வெளிவந்தன.

இரண்டு படங்களுமே இளம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்களுடன் வரவேற்பைப் பெற்று இந்த பொங்கல் விடுமுறை தினத்தில் அரங்கு நிறைந்து வருகின்றன.

வினியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் மகிழ்ச்சியுடன் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதிலும், ‘வீரம்’  படத்திற்கு அதிகமான வரவேற்பு கிடைத்து, முதலில் வெளியான திரையரங்குகளை விட இன்னும் அதிகமான அரங்குகளில் படத்தை வெளியிட்டுள்ளார்கள்.

அஜித் படம் மாபெரும் வெற்றி பெற்றதா, விஜய் படம் வெற்றி பெற்றதா, என்ற பேச்சு இல்லாமல், வெளியான இரண்டு படங்களுமே வசூலைக் குவித்து வருவது தமிழ்த் திரையுலகை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

இந்த பொங்கல் ‘தல பொங்கல்’, ‘தளபதி பொங்கல்’ னு இல்லாம ‘தமிழ் சினிமா பொங்கல்’னு சொல்ல வச்சிருக்கு…

Read Previous

அவங்களும் ‘ட்ரிம்’ பண்றாங்களாம்…

Read Next

‘வீரம்’ வெற்றிக்கு விஜய் வாழ்த்து…