ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் பொன் ராம் இயக்கத்தில், அந்தோணி தாசன் இசையமைப்பில், சசிகுமார், மிருணாளினி ரவி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, சிங்கம் புலி மற்றும் பலர் நடிக்கும் படம் எம்ஜிஆர் மகன்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தேசினிய்ல ஆரம்பமானது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா படங்களுக்குப் பிறகு பொன்ராம் இயக்கும் படம் இது.
கிராமத்துப் பின்னணியில் படங்களைக் கொடுத்து வெற்றி பெற்றவர்கள் இயக்குனர் பொன்ராம், சசிகுமார். அவர்கள் இருவரும் இணையும் முதல் படம் இது.
இந்தப் படத்துக்கு வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்ய, விவேக் ஹர்ஷன் எடிட்டிங் பணிகளையும், துரைராஜ் கலை இயக்குநராகவும் பணிபுரிகிறார்கள்.