விஜய் – விஷால் திடீர் சந்திப்பு…

vijay and vishal meeting‘கத்தி’ படத்தின் நாயகன் விஜய்யும், ‘பூஜை’ படத்தின் நாயகன் விஷாலும் நேற்று திடீரென சந்தித்துக் கொண்டனர். அப்போது இருவரும் பரஸ்பரம் அவர்களுடைய படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துக் கொண்டார்கள்.

சென்னையில் உள்ள ஒரு பிரிவியூ திரையரங்க வளாகத்தில் ஒரு திரையரங்கில் ‘பூஜை’ படமும், மற்றொரு திரையரங்கில் ‘கத்தி’ படம் திரையிட்ப்பட்டிருந்தது. இருவரும் அவரவர் திரைப்படங்களைப் பார்த்த வந்த போதுதான் அந்த சந்திப்பு நடந்தது.

இரு தினங்களுக்கு முன் விஜய் நடித்த ‘கத்தி’ படத்தின் பிரச்சனை முடிவு பெறாமல் இழுத்துக் கொண்டிருந்த போது, விஜய்க்கு ஆதரவாக விஷாலும் ‘பூஜை’ படத்தை தீபாவளிக்கு வெளியிடுவதை தள்ளி வைக்க முடிவு செய்தார் என செய்திகள் வெளியானது.

அதைத் தொடர்ந்து இருவரும் நேற்று சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டது திரையுலகில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

தீபாவளிக்கு வெளிவந்துள்ள இவர்களின் இரண்டு படங்கள்தான் தீபாவளி ரேஸில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

பூஜை – விமர்சனம்

Read Next

‘கத்தி’ – ‘கட் அவுட்’ மீது ஏறிய விஜய் ரசிகர் மரணம்…