கல்சன் மூவிஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகி வரும் படம் ‘பென்சில்’.
மணி நாகராஜ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜீவா’ படங்களின் நாயகியான ஸ்ரீதிவ்யா நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. இப்படத்திற்கான இரண்டு பாடல்களைப் படமாக்குவதற்காக 25 பேர் கொண்ட குழு நாளை ஜப்பானில் உள்ள டோக்கியோ நகரத்துக்கு செல்கின்றனர்.
கவிஞர் தாமரை வரிகளில் ‘கண்களிலே கண்களிலே கடுகளவு தெரிகிறதே…மற்றும் ‘யாரைஙப போலும் இல்லா நீயும், எல்லோர் போலும் உள்ள நானும்’ என்ற இரண்டு பாடல்களுக்கு ஜீ.வி.பிரகாஷும், ஸ்ரீ திவ்யாவும், நடன இயக்குனர் ஷெரிப்பின் நடன அமைப்பில் அசைவுகளுக்கு நடனமாட உள்ளனர்.
இதுவரை யாரும் பார்த்திருக்காத ஜப்பானின் இயற்கையின் அழகையும், நகரத்தின் ஒளி விளக்குகளையும் இயக்குனர் மணிநாகராஜ், கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவில் காண்பிக்கவுள்ளார்.