விஜய்யை அரசியலுக்கு வரச் சொல்லும் ஏ.ஆர்.முருகதாஸ்…

Kaththi - Gallery - 2_00014‘கத்தி’ படத்தின் வெளியீட்டுப் பிரச்சனை முழுவதுமாக ஓய்ந்து படமும் வெளிவந்து வெற்றி பெற்றது என்ற செய்தியைக் கேட்டதும், அப்படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், வானொலி, தொலைக்காட்சிகளில் பேட்டி என்ற பெயரில் பல விஷயங்களை வெளிப்படுத்தி வருகிறார்.

நேற்று, ஒரு தனியார் தொலைக்காட்சியில் அவர் கொடுத்த ஒரு பேட்டியில் விஜய்யை மிகவும் புகழ்ந்து தள்ளிவிட்டார். ‘கத்தி’ பட வெளியீட்டிற்கு முன்பாக பிரச்சனை நடந்து கொண்டிருந்த போது எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் இருந்த முருகதாஸ், நேற்றைய பேட்டியில் போராட்டக்காரர்களைப் பற்றியும், விஜய்யைப் பற்றியும் கூறிய விஷயங்கள் ஆச்சரியமளிக்கும் விதத்தில்தான் இருந்தன.

ஹிந்திப் படங்களை இயக்கினால் ஊர் ஊராகச் சென்று படத்தின் பிரமோஷனுக்காக சென்றவர், இந்த ‘கத்தி’ படத்திற்காக இதுவரை எந்த மீடியாவையும் பெரிதாகச் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சில டிவிக்கள், இணையதளங்கள் இவற்றிற்கு மட்டுமே பேட்டி அளித்திருக்கிறார்.

அப்படி அவர் நேற்று அளித்த பேட்டியில், “விஜய்யை திரையில் பார்ப்பதிலும், படத்தில் பார்ப்பதிலும் நிறையவே வித்தியாசம் இருக்கும். நேரில் ‘என் நெஞ்சில் குடியிருக்கும்…’ என அமைதியாகப் பேசுபவர், திரையில் கலகலப்பாகவும், ஆச்சரியப்படும் விதத்திலும் நடிப்பார். இதில் எது சார் உண்மை என அவரிடமே நான் கேட்பேன்.

‘கத்தி’ படத்தின் கிளைமாக்ஸ் வசனத்தை ஆவேசமாகத் திரையில் பேசிய விஜய், அதை அப்படியே மேடையில் பேச வேண்டும் என்பதே எனது ஆசை,” என்ற அவரது விருப்பத்தையும் தெரிவித்தார்.

‘கத்தி’   படத்தின் கதையிலும் அரசியல், ‘கத்தி’ படத்தின் பின்னணிக் கதையிலும் அரசியல், ‘கத்தி’ பட வெளியீட்டிலும் அரசியல், ‘கத்தி’ படம் வெளிவந்த பின்னரும் ‘அரசியல்’ என ஏ.ஆர்.முருகதாஸ் பேசுவது ஆச்சரியமான ஒன்றுதான்.

Read Previous

‘கிட்ணா’ படத்தில் இரு வேடத்தில் மகிமா…

Read Next

‘பிசாசு’ மனதை வருடும் விஷயமும் கூட…. – இயக்குனர் மிஷ்கின்