இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் தியாகராஜன் தயாரிப்பில் பிரசாந்த் நாயகனாக நடித்து வரும் ‘சாஹசம்’ படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார்.
நேற்று தமனின் பிறந்த நாளையொட்டி திரையுலகப் பிரபலங்கள், மற்றும் சாஹசம் படக்குழுவினர் கலந்து கொண்ட பிறந்த நாள் விழாவை தமனுக்காக தியாகராஜன், பிரசாந்த் ஏற்பாடு செய்திருந்தனர்.
அதில், ஆற்காடு நவாப் ஸதா முகம்மது ஆசிப் அலி தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். தயாரிப்பாளர்கள் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, எல்எம்எம் முரளிதரன், ஜேஎஸ்கே. சதீஷ்குமார், ஒளிப்பதிவாளர்கள் சௌந்தர், பப்பு, இயக்குனர் மதி, கலை இயக்குனர் மிலன், பின்னணிப் பாடகர்கள் விஜய் பிரகாஷ், ரஞ்சித், ஆலாப் ராஜ், ராகுல் நம்பியார், ஹரிச்சரண், சுசித்ரா, ரிட்டா, மானஸி, மேகா, நவீன், தீபக், ரெனிலா ரெட்டி, மோனிஷா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
‘சாஹசம்’ படத்திற்காக ஐந்து அற்புதமான பாடல்களை இசையமைத்துக் கொடுத்துள்ள தமனை மிகவும் பாராட்டிய தயாரிப்பாளர் தியாகராஜன் அவருக்கு கார் ஒன்றை தமனின் பிறந்த நாள் பரிசாக அளித்தார்.
தியாகராஜன், மற்றும் பிரசாந்தின் அன்பு மழையில் நனைந்த தமன் அவர்களுக்கு மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.