ஜி.தனஞ்செயன் எழுதிய ‘Pride Of Tamil Cinema’…

pride-of-tamil-cinema

இந்தியத் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக விளங்கி வரும் யுடிவி நிறுவனத்தின் தென்னிந்திய நிர்வாக தலைவராக இருப்பவர் ஜி.தனஞ்செயன்.

திரைப்பட தயாரிப்பில் மட்டுமல்லாது தமிழ்த் திரைப்படங்களை மிகவும் நேசிப்பவர், ரசிப்பவர். தமிழ்த் திரைப்படங்களைப் பற்றிய சிறந்த ஆய்வாளராகவும் அவர் இருந்து வருகிறார்.

1931-ஆம் ஆண்டு முதல் 2010-ஆம் ஆண்டு வரையிலான மிகச் சிறந்த தமிழ் திரைப்படங்கள் குறித்தும், திரைக்கலைஞர்கள் குறித்தும் ‘தி பெஸ்ட் ஆப் தமிழ்சினிமா’ (THE BEST OF TAMIL CINEMA) என்ற புத்தகத்தை ஏற்கெனவே எழுதியிருக்கிறார். இரண்டு தொகுதிகளாக வெளி வந்த ‘த பெஸ்ட் ஆப் தமிழ் சினிமா’ தமிழ்த்திரைப்படங்கள் குறித்த மிகச் சிறந்த பதிவாக அமைந்த ஒரு புத்தகமாகும். அப்படி ஒரு விரிவான புத்தகம் தமிழ்த் திரைப்படங்களைப் பற்றி வந்ததேயில்லை எனச் சொல்லலாம்.

g dhananjayanதமிழ் சினிமா பற்றி, ‘மின்மினி பூச்சிகள்’ மற்றும் வேறு சில புத்தகங்களையும் எழுதியுள்ள ஜி. தனஞ்செயன் இப்போது ‘பிரைடு ஆப் தமிழ் சினிமா’ (PRIDE OF TAMIL CINEMA) என்ற புத்தகத்தை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.

1931-ஆம் ஆண்டிலிருந்து 2013-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டங்களில் தேசிய விருது பெற்ற, மற்றும் சர்வதேச திரைப்பட விழாக்களில் விருது பெற்ற தமிழ்த் திரைப்படங்களைப் பற்றிய தொகுப்பாக இந்த புத்தகத்தை அவர் எழுதியிருக்கிறார். இப்புத்தகத்தில் சம்பந்தப்பட்ட படங்களின் புகைப்படங்களுடனும் தொகுக்கப்பட்டுள்ளது.

பல மாத உழைப்பில் தொகுத்து எழுதப்பட்டுள்ள ‘பிரைடு ஆப் தமிழ் சினிமா’ (PRIDE OF TAMIL CINEMA) புத்தகத்துக்கு வெளி வரும் முன்பே மிகப்பெரிய கௌரவமும், அங்கீகாரமும் கிடைத்திருக்கிறது. இந்த மாதம் 21-ஆம் தேதி முதல் கோவாவில் நடைபெறவிருக்கிற இந்தியன் பனோரமா திரைப்பட விழாவில், ‘பிரைடு ஆப் தமிழ் சினிமா’ (PRIDE OF TAMIL CINEMA) புத்தகம் வெளியிடப்படவிருக்கிறது.

தமிழ் சினிமாவை பெருமைப்படுத்தும் வகையிலும், இந்திய சினிமா பிரபலங்கள் மட்டுமல்லாமல், உலக சினிமா பிரபலங்களும் விருதகளைக் குவித்த சிறந்த தமிழ்த் திரைப்படங்களைப் பற்றி அறிந்துகொள்ள வசதியாக இருக்குமென்றுதான் இப்புத்தகத்தை ஆங்கிலத்தில் எழுதி இருப்பதாக சொல்கிறார் தனஞ்செயன்.

தமிழ் திரைப்படத் துறையில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல, தமிழ் சினிமாவை அறிய விரும்பும், தமிழ் சினிமாவை ஆய்வு பூர்வமாக அணுக விரும்புகிறவர்களுக்கும் இப்புத்தகம் அருமையாகப் பயன்படக் கூடிய விதத்தில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தமிழ்த் திரைப்பட ஆர்வலர்களும், ரசிகர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களும்,  அவர்களது தாய் மொழியில் படிக்கும் விதத்தில் ‘பிரைடு ஆப் தமிழ் சினிமா’ தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட உள்ளது என்கிறார் ஜி.தனஞ்செயன்.

Read Previous

மிருணாள் சென் பாராட்டிய இயக்குனர் ருத்ரையா மரணம்…

Read Next

‘என்னை அறிந்தால்’ டிசம்பரில் இசை வெளியீடு…