பரபரப்பாக சுத்தம் செய்த ‘பப்பரப்பாம்’ குழுவினர்…

papparapam team clean india newsஇயக்குனர், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் உதவியாளரும், ‘உருமி’ படத்தின் வசனகர்த்தாவுமான சசிகுமாரன் இயக்கியுள்ள படம் ‘பப்பரப்பாம்’.

கார்த்தி நடித்த ‘நான் மகான் அல்ல’, ‘யாழ்’ படங்களில் நடித்துள்ள வினோத் கதாநாயகனாக நடித்துள்ளார். ‘சதுரங்க வேட்டை’ இஷாரா, யாமினி, ராஜா, கதிர் கமல், ‘நாய்கள் ஜாக்கிரதை’ ஜெனிஷ், சூப்பர் சிங்கர் புகழ் அழகேசன் உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படக் குழுவினர் அவர்களது படத்தை வித்தியாசமான முறையில் அறிமுகம் செய்து வைத்தனர். படத்தில் நடித்துள்ள முக்கிய நட்சத்திரங்கள் உட்பட படக்குழுவினர் கிட்டத்தட்ட நூறு பேர் கலந்துகொண்டு பட்டினப்பாக்கம்- நொச்சிக்குப்பம் அருகேயுள்ள சாலைகளை முழுவதுமாக சுத்தம் செய்தனர்.

”இப்படி சுத்தம் செய்து தங்கள் படத்தை அறிமுகம் செய்வதை பெருமையாக நினைப்பதாகவும், இது இத்தோடு நிற்காமல் படம் வெளியாகும் வரை இதே குழுவோடு வேறு வேறு இடங்களில் எங்கள் பணியைத் தொடர்வோம்,” என்றும் படத்தின் இயக்குனர் சசிகுமாரன் கூறினார்.

நாங்களும் சுத்தம் செய்கிறோம் என்கிற மாதிரி போஸ் கொடுத்து விட்டு ஓடிவிடாமல் அடிக்கிற வெயிலில் காலையில் ஆறு மணிக்கு ஆரம்பித்த சுத்தம் செய்யும் பணி மாலை ஆறுமணி வரை நடைபெற்றது. படக்குழுவினர் யாரும் கலையாமல் சுத்தம் செய்ததைப் பார்த்த அந்த ஏரியா மக்களும் அவர்களோடு இணைந்து கொண்டனர். அந்த சாலையே அரசியல் வாதிகள் கூட்டம்போடும் நாளில் சாலை எப்படி பளிச்சென்று இருக்குமோ அவ்வளவு சுத்தமாக இருந்தது. ஐம்பது குப்பைத்தொட்டிகளை அந்தச் சாலையெங்கும் நிரந்தரமாக வைத்தனர் ‘பப்பரப்பாம்’ படக்குழுவினர்.

மரணத்திலிருந்து உயிர்த்தெழும் ஒருவனைப் பற்றிய ஒரு கதைதான் ‘பப்பரப்பாம்’.

படத்தின்  பெயர்தான் வித்தியாசம் என்று பார்த்தால் படக்குழுவினர் செய்வதும் வித்தியாசமாகவே இருக்கிறது.

Read Previous

‘களம்’…ஒரு மாளிகையின் மர்மம்…

Read Next

Nannbenda – Official Teaser