ஒரு படம் வெளியாகும் போது அந்தப் படத்திற்கு சம்பந்தம் இல்லாத மற்ற ஹீரோக்கள் அந்தப் படத்தைப் பற்றிப் பாராட்டுவது பொறமை நிறைந்த திரையுலகில் நடக்குமா என்பது ஆச்சரியமான ஒன்றுதான்.
அப்படியெல்லாம் சிறிதும் யோசிக்காமல், நல்ல படம் வெளிவந்தால் அவற்றைப் பாராட்ட வேண்டும் என்று சில நடிகர்கள் மட்டுமே நினைக்கிறார்கள். அவர்களில் விஜய் மிகவும் முக்கியமானவர்.
இரு தினங்களுக்கு முன் வெளிவந்து அனைவரின் வரவேற்பையும் பெற்று வரும் ‘காவியத் தலைவன்’ படத்தைப் பாராட்டி, அனைவரும் கொண்டாட வேண்டிய படம் என விஜய் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் இந்த பரந்த மனசை அவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் பாராட்டி வருகிறார்கள்.
‘காவியத் தலைவன்’ படத்தைப் பார்த்து பாராட்டி, விஜய் அளித்துள்ள வீடியோ பேட்டியில் கூறியிருப்பதாவது,
“‘காவியத் தலைவன்’ படம் பார்த்தேன், ரீசன்ட் டைம்ல ரொம்ப சிறப்பான முக்கியமான ஒரு தமிழ்ப் படம்னு சொல்லலாம். ரொம்ப ‘ரேர்’ஆ தான் இந்த மாதிரி படங்கள் ரிலீஸ் ஆகும்.
நல்லா குடும்பத்தோட எல்லாரும் போய் போர்த்துட்டு கொண்டாட வேண்டிய ஒரு தமிழ்ப் படம்னு சொல்லலாம். முக்கியமா வசந்தபாலன் சாருக்கு
என்னுடைய வாழ்த்துக்கள். ஏன்னா, இந்த மாதிரி ஒரு ஸ்கிரிப்டை, இந்த மாதிரி ஒரு பேக் ட்ராப்பை சொல்லணும்னு அவர் எடுத்த அந்த முயற்சிக்கு முதல்ல என்னோட வாழ்த்துக்களைத் தெரிவிச்சிக்கிறேன்.
படத்துல நடிச்ச சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, நீரவ்ஷா, ரகுமான் சார், டெக்னீஷியன்ஸ் எல்லாருக்குமே இந்தப் படம் வெற்றியடைஞ்சதுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்,” என விஜய் தெரிவித்துள்ளார்.
விஜய் அளித்துள்ள வீடியோ பேட்டிக்கு, தயாரிப்பாளர் சஷிகாந்த், இயக்குனர் வசந்தபாலன், நடிகர் சித்தார்த் உள்ளிட்ட அனைவரும் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
http://youtu.be/mH_ullds6jo