இன்று 65வது பிறந்த நாள் காணும் ரஜினிகாந்துக்கு அவருடைய நீண்ட கால நெருங்கிய நண்பர் கமல்ஹாசன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் தற்போது அமெரிக்காவிலுள்ள, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருப்பதால் அவருக்கு வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்து அதை அவருடைய யு டியூப் இணையதளத்திலும் பதிவேற்றியுள்ளார்.
“ஹாய் ரஜினி. இனிய 44வது பிறந்த நாள் வாழ்த்துகள். லிங்காவின் அபார வெற்றிக்கும் எனது வாழ்த்துக்கள். என்ன இப்படி வாழ்த்து சொல்றனேன்னு நினைக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்.
ஊர்ல இல்லை, லாஸ் ஏஞ்சலீஸ்ல இருக்கேன். போன மாசம்தான் நீங்க எனக்கு போன் பண்ணி 42வது வயசுக்கான பிறந்த நாள் வாழ்த்துக்களைச் சொன்னீங்க.
அதுக்குப் பதில்னு இல்லை, நம்ம நட்புடைய வயசு கிட்டத்தட்ட அதுவா இருக்கும்னு நினைக்கிறேன். ஸோ, அதற்கும் சேர்த்து வாழ்த்துக்கள். வெரி ஹேப்பி பர்த்டே, அன்ட் கிராண்ட் சக்சஸ் ஃபார் லிங்கா.
ஊருக்கு வந்தோ, அல்லது இங்க இருக்கும் போதோ படம் பார்த்துடறேன். பார்த்துட்டு உங்களுக்கு போன் பண்றேன். லாங் வே டூ கோ. ஹெல்த்தி அன்ட் ஹேப்பி லைப்,” என தனது பிறந்த நாள் வாழ்த்தாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.