அப்சரா ராம்குமார் இயக்கத்தில் ஜாக் மைக்கேல், வித்யா, ஹரிணி மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘ஒண்ணுமே புரியல’.
இப்படம் தமிழில் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், அதற்கு முன்னரோ ஹாலிவுட்டில் ஆங்கிலத்திலும், மற்றும் ஜெர்மன் மொழியிலும் தயாரிப்பதற்காக பிரபல ஜெர்மன் சினிமா நிறுவனமான ‘ஃபென்ச்சல் – ஜானிஷ் பிலிம் புரொடக்ஷன்ஸ் – ஜிபிஆர் உரிமம் பெற்றுள்ளது.
இது பற்றி அப்சரா இராம்குமாரிடம் கேட்ட போது, ‘இது எதிர்பாராத ஒரு மகிழ்ச்சி. எனக்கு மட்டுமின்றி தமிழ்த் திரையுலகத்திற்கே பெருமை சேர்க்க கூடிய ஒரு விஷயமாக இதைக் கருதுகிறேன்” என்று கூறினார்.
இந்தப் படத்திற்கு ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் சகோதரி ஏ.ஆர். ரைஹ்னா இசை அமைத்துள்ளார். இப்படத்தின் உயிர்நாடி ஏ.ஆர். ரைஹனாவின் இசை” என்று அப்சரா இராம்குமார் கூறியுள்ளார்.
‘ஒண்ணுமே புரியல” என்கிற திரைப்படம் உலக சினிமாவில் ஒரு புத்தம் புதிய படைப்பு என்றும், இது ஒரு சைக்காலஜிக்கல் திரிலர் என்றும் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.
‘ஒண்ணுமே புரியல” திரைப்படத்தை கலிபோர்னியாவில் உள்ள பிரபல ஹாலிவுட் திரைப்படக் கம்பெனியுடன் இணைந்து உரிமை பெற்றுள்ள ஜெர்மன் நிறுவனம் தயாரிக்கப் போகிறது.
மேற்கு கலாச்சாரத்திற்கு ஏற்றபடி கொஞ்சம் மாற்றி அமைத்து, ஆங்கிலத்தில் எடுக்கப்படும் இப்படம் ஜெர்மன் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் 2016-ம் ஆண்டு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழில் ‘ஒண்ணுமே புரியல” திரைப்படம் ஓரிரு மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.