இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, கவிஞர் வைரமுத்து முதல் முறையாக இணைந்துள்ள ‘இடம் பொருள் ஏவல்’ படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
‘நீர்ப் பறவை’ படத்திற்குப் பிறகு சீனு ராமசாமி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் யுவனையும், வைரமுத்துவையும் இணைத்து பணி புரிய வைக்க சீனு பெரு முயற்சி எடுத்தார்.
பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அந்தக் கூட்டணியின் முதல் படமே இசை ரசிகர்களிடம் பாராட்டுதல்களைப் பெற்று வருகிறது. படத்தில் மொத்தம் 6 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
1. ஈரக் காத்தே….பாடலை செந்தில்தாஸ், அனிதா பாடியுள்ளனர்…
2. குறுந்தொகை….பாடலை வி.வி.பிரசன்னா, சோனியா,
3. எந்த வழி…பாடலை வைக்கம் விஜயலட்சுமி,
4. கொண்டாட்டமே…பாடலை ஸ்ரீராம் பார்த்தசாரதி,
5. அத்துவான காட்டுக்கு….பாடலை யுவன்ஷங்கர் ராஜா
6. வையம்பட்டி…பாடலை அந்தோணி தாசன், பிரிதர்ஷினி ஆகியோர் பாடியுள்ளனர்.
கிராமிய மணம் கமழும் இந்தப் பாடல்களில் இளையராஜா – வைரமுத்து கூட்டணி இணைந்து பல ஹிட் பாடல்களைக் கொடுத்த அந்த இனிமையான 80களின் வாசம் வீசுகிறது.
ஐ டியூன்ஸ் தரவிறக்கத்தில் இப்படத்தின் பாடல்கள் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.
இந்தக் கூட்டணியை இணைப்பதில் பெரும் பங்கு வகித்த இயக்குனர் சீனு ராமசாமிக்கு இசை ரசிகர்கள் கண்டிப்பாக பாராட்டுத் தெரிவிப்பார்கள்.