கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க தனுஷ், அமீரா தஸ்தூர், கார்த்திக் மற்றும் பலர் த்துள்ள ‘அனேகன்’ திரைப்படம் அடுத்த மாதம் 13ம் தேதி வெளியாக உள்ளது.
‘மாற்றான்’ படத்தின் தோல்விக்குப் பிறகு கே.வி.ஆனந்த் இப்படத்தை இயக்கியுள்ளார். 2013ம் ஆண்டே இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி அதன் பின் சில மாதங்கள் கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் புத்துயிர் பெற்று தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று முடிந்தது.
அதன் பின் பாடல்கள் வெளியிடுவதில் தாமதம், திரைக்கு வருவதிலும் தாமதம் என செய்திகள் பரவி, பாடல்கள் வெளிவந்து சூப்பர் ஹிட்டாக ஆரம்பித்தன.
பொங்கலுக்கும் படம் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலையில், தற்போது பிப்ரவரி 13ம் தேதி வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
அடுத்த மாதம் தனுஷுக்கு இரட்டைக் கொண்டாட்டம். அமிதாப்புடன் அவர் நடித்துள்ள ‘ஷமிதாப்’ பிப்ரவரி 6ம் தேதி வெளிவர உள்ளது. அதற்கடுத்த வெள்ளிக்கிழமையே ‘அனேகன்’ படமும் வெளிவர உள்ளது.
தனுஷ் நடித்து இதற்கு முன் வெளிவந்த ‘வேலையில்லா பட்டதாரி’ படம் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது ‘அனேகன்’ படத்திற்கும் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.