அஜித் நடித்துள்ள ‘என்னை அறிந்தால்’ படம் பிப்ரவரி 5ம் தேதி வெளியாக உள்ளது.
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் முதன் முறையாக நடித்துள்ள இந்தப் படத்தில் அஜித்துடன் முதன் முறையாக அனுஷ்கா ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
அஜித் நடிக்கும் ஒரு படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் முதன் முறையாக இசையமைக்கிறார். இப்படி இந்தப் படத்தில் சில முதல் விஷயங்கள் நடைபெற்றுள்ளன.
‘என்னை அறிந்தால்’ படம் வெற்றி பெற அஜித் திருப்பதில் சாமி கும்பிட்டுள்ளார். திருப்பதியில் அஜித்தைப் பார்த்த மகிழ்ச்சியில் ரசிகர்களை அவரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அங்கிருந்த சிறிது நேரத்தில் கூட சில ரசிகர்களுடன் அஜித் புகைப்படம் எடுத்து அவரை மகிழ்ச்சிப்படுத்தினார் என திருப்பதியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.