சற்குணத்தின் ‘சண்டி வீரன்’…

chandi veeran rights news‘களவாணி, வாகை சூடவா, நய்யாண்டி’ படங்களை இயக்கிய சற்குணம், இயக்குனர் பாலா தயாரிப்பில் அதர்வா, ஆனந்தி நடிக்கும் ‘சண்டி வீரன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தை இயக்குனர் பாலாவிடமிருந்து தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா திரையரங்க உரிமைகளை ஸ்ரீ கிரீன் புரொடக்சன்ஸ் நிறுவனம் நல்ல விலைக்கு வாங்கியுள்ளது.

இந்நிறுவனம் ‘மாசாணி’ என்ற படத்தை தயாரித்து வெளியிட்டதோடு, ‘சலீம்’ படத்தின் தமிழ்நாடு வினியோக உரிமையையும், ‘வேலையில்லா பட்டதாரி, கயல்’ படங்களின் சென்னை வினியோக உரிமையையும், “வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, பீட்சா 2, வெள்ளக்கார துரை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா” ஆகிய படங்களின் செங்கல்பட்டு ஏரியா வினியோக உரிமையையும் பெற்று அந்தப் படங்களை வெளியிட்டது.

‘சண்டி வீரன்’ படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

Read Previous

திருப்பதியில் அஜித்…

Read Next

‘Baahubali’ Talkie Part Completed