‘பாம்பு சட்டை’ படப்பிடிப்பு ஆரம்பம்…

pambu sattai poojaiஆர்.சரத்குமார், ஆர்.ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோரின் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனமும், இயக்குனர் மனோபாலாவின் பிக்சர் ஹவுஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படம் ‘பாம்பு சட்டை’.

பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் துவங்கியது. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, பொருளாளர் ‘ஃபைவ் ஸ்டார்’ கதிரேசன், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் பலர் பங்கேற்று படக் குழுவினரை வாழ்த்தினர்.

பாபி சிம்ஹா, ராஜேந்திரன் நடித்த முதல் காட்சியை ராதிகா சரத்குமார் கிளாப் அடித்து துவக்கி வைத்தார்.

“என்னை இயக்குனராக அறிமுகப்படுத்தும் தயாரிப்பளர்களுக்கும், எனது குரு இயக்குனர் சங்கர் சார் அவர்களுக்கும் எனது நன்றிகள்,” என படத்தின் இயக்குனர் ஆடம்தாசன் கூறினார்.

Read Previous

‘உத்தம வில்லன், ரஜினி முருகன்’ படங்களை வெளியிடும் ஈராஸ்

Read Next

ஸ்டுடியோக்களை வியந்து பார்த்தேன் – ஜோஸ் செல்வராஜ்