இந்திய திரைப்படத்துறையில் இருக்கும் உலகளாவிய முன்னணி நிறுவனமான ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகவுள்ள மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களான ‘உத்தம வில்லன்’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘ரஜினி முருகன்’ ஆகிய திரைப்படங்களை வெளியிட உள்ளன.
‘உத்தம வில்லன்’ படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்க கமல்ஹாசன், பூஜா குமார் ஆன்ட்ரியா மற்றும் பலர் நடிக்கிறார்கர்ள. இப்டத்தின் முன்னோட்டம் கடந்த பொங்கல் அன்று வெளியிடப்பட்டது. மேலும் இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி வெளிவரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
‘ரஜினி முருகன்’ திரைப்படம், சிவகர்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிக்க பொன்ராம் இயக்கும் படம். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ மாபெரும் வெற்றிப் படமானது.
திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துடன் இணைந்தது பற்றி ஈராஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுனில் லுல்லா கூறியதாவது, “முன்னணி இயக்குனரான லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்து, இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான கமல்ஹாசனின் ‘உத்தம வில்லன்’ திரைப்படத்தையும், தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகரான சிவகார்த்திகேயனின் ‘ரஜினி முருகன்’ திரைப்படத்தையும் வெளியிடுவது மிகவும் பெருமையாக உள்ளது,” என்றார்.
திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான லிங்குசாமி, “இந்திய சினிமாவில் வெற்றிகரமாகவும் மிகவும் வலிமையான நிறுவனமான ஈராஸ் நிறுவனத்துடன் இணைந்து கமல்ஹாசன் அவர்களின் ‘உத்தம வில்லன்’ திரைப்படத்தையும், தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சிவகார்த்திகேயனின் ‘ரஜினி முருகன்’ திரைப்படத்தையும் வெளியிடுவது எங்களுக்கு பெருமையாக உள்ளது.மேலும் ஈராஸ் நிறுவனத்துடன் இணைந்து நாங்கள் செல்லவுள்ள நீண்ட, வெற்றிகரமான பயணத்திற்கு இது ஒரு தொடக்கம் மட்டுமே,” என்றார்.