மிஷ்கின் வெளியிடும் ‘கள்ளப் படம்’…

kallappadamஇயக்குனர் மிஷ்கின் அவரது உதவியாளரான வடிவேல் இயக்குனராக அறிமுகமாகும் ‘கள்ளப் படம்’ படத்தை அவருடைய சொந்தத் தயாரிப்பு நிறுவனமான லோன் உல்ஃப் நிறுவனம் சார்பில் வெளியிட உள்ளார்.

இது குறித்து இயக்குனர் மிஷ்கின் கூறியதாவது, “நான் இந்த படத்தை பார்த்தேன். என்னை பொறுத்த வரையில் இப்படம் தமிழ் சினிமாவின் தரமான படங்களின் பட்டியலில் இடம்பெறும். வடிவேல் எனது சிஷ்யன் என்று கூறி பெருமிதம் கொள்ளும் அதேவேளையில், இப்படத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

லக்ஷ்மி ப்ரியா, இசையமைப்பாளர் கே, ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் சந்தோஷ், படத்தொகுப்பாளர் காஜின், வடிவேல் ஆகியோரது இந்தக் கூட்டணி நம்பிக்கையின் அச்சாணியாய் விளங்குகிறது. சினிமாவை ரசிக்கும் ஒவ்வொருவருக்கும் இப்படம் ஒரு விருந்தாய் அமையும்,” என்கிறார் மிஷ்கின்.

Read Previous

கிராமத்து காதலுடன் வரும் ‘வெத்து வேட்டு’…

Read Next

படங்களின் பெயரை பாட்டில் நுழைத்த கபிலன் வைரமுத்து