‘அனேகன்’ 2 நாளில் 20 கோடி வசூல் – தனுஷ்

Amyra Dastur, Dhanush in Anegan Tamil Movie Stillsதனுஷ், அமைரா தஸ்தூர், கார்த்திக் மற்றும் பலர் நடிக்க, கே.வி.ஆனந்த் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையைமப்பில் இரு தினங்களுக்கு முன் 13ம் தேதி வெளிவந்த ‘அனேகன்’ திரைப்படம் வெளியான திரையரங்குகளில் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது.

முன்பெல்லாம் ஒரு படம் 100 நாள் ஓடும், 175 நாள் ஓடும் என்றுதான் பேசப்பட்டு வந்தது. ஆனால், தற்போது படம் முதல் நாள் எவ்வளவு வசூலானது, இரண்டாம் நாள் வசூலானது என்றுதான் பேச ஆரம்பித்துள்ளார்கள்.

ஒவ்வொரு படம் வெளியாகும் போதும், தங்களது அபிமான நடிகரின் படம் வசூல் சாதனை புரியுமா என்பதைத்தான் முன்னணி நடிகர்களின் ரசிகர்களும் எதிர்பார்க்கிறார்கள்.

அது தனுஷ் நடித்துள்ள ‘அனேகன்’ படத்திற்கும் ஏற்பட்டுள்ளது. அதை மெய்ப்பிக்கும் விதத்தில் படத்தின் வசூலும் அமைந்துள்ளதாம்.

படத்தின் வசூல் குறித்து தனுஷ் இன்று கூறியிருப்பதாவது, “அனேகன்’ திரைப்படம் இரண்டு நாட்களில் 20 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இப்படிப்பட்ட அமோகமான வரவேற்புக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை.  அதிகமான ஊக்கத்துடனும், மகிழ்ச்சியுடனும், பணிவுடனும் உள்ளேன்,” எனத் தெரிவித்துள்ளார்.

Read Previous

மதம் கடந்த ‘மீண்டும் ஒரு காதல் கதை’

Read Next

வைரமுத்துவின் அனைத்து பாடல்களுடன் ‘அகத்திணை’…