‘லிங்கா’ பிச்சை போராட்ட விவகாரம், தயாரிப்பாளர் சங்கம் கண்டனம்

lingaa collection newsலிங்கா திரைப்படத்திற்காக ஏற்பட்ட நஷ்ட ஈட்டுத் தொகை விவகாரத்தில் தயாரிப்பு நிறுவனத்திற்கும், வினியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களுக்கிடையே தொடர்ந்து இழுபறி நிலையே நீடித்து வருகிறது-

அதைத் தொடர்ந்து விரைவில் ‘மெகா பிச்சை’ எடுக்கும் போராட்டம் ஒன்றை நடத்தப் போவதாக பாதிக்கப்பட்ட வினியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் சில தினங்களுக்கு முன் அறிவித்தனர்.

இது தொடர்பாக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி தாணு, துணைத் தலைவர்கள் கதிரேசன், பி.எல்.தேனப்பன், செயலாளர்கள் டி.சிவா, ராதா கிருஷ்ணன், பொருளாளர் டி.ஜி.தியாகராஜன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

‘லிங்கா’ படப் பிரச்சினையில் விநியோகஸ்தர்கள் பட வெளியீட்டிலிருந்து தொடர்ந்து ‘லிங்கா’ படத்தின் தயாரிப்பாளருக்கும், அப்படத்தில் நடித்த ரஜினிகாந்துக்கும், விநியோகஸ்தர்கள் போட்ட ஒப்பந்தத்தை மிறி பல்வேறு பிரச்சினைகள் செய்து வருகிறார்கள்.

கடந்த காலங்களில் ரஜினிகாந்த் நடித்த சுமார் 97 சதவீதம் படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்து விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் லாபத்தை ஈட்டித் தந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் ‘லிங்கா’ படத்தில் விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இழப்பு ஏற்பட்டிருந்தால் அதை அவர்கள், அவர்களுக்கு சம்பந்தப்பட்ட சங்கத்தில் தெரிவித்து அந்த சங்கம் முறையாக கூட்டமைப்பில் விவாதித்து தீர்வு கண்டிருக்க வேண்டும்.

அதைவிடுத்து படத்தின் தயாரிப்பாளரையும், ரஜினிகாந்தையும் இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் உண்ணாவிரதம் மற்றும் பிச்சை எடுக்கும் போராட்டம் என்று அறிவித்தது நமது தொழில் தர்மத்திற்கு மாறானது. மேலும் அது கண்டனத்திற்குரியது.

திரையுலகம் என்பது அரசியலுக்கு அப்பாற்ட்டது. தேவையற்ற முறையில் அரசியல் தலைவர்களை உள்ளடக்கிக் கொள்வது மிகவும் வருந்தத்தக்கது. கண்டிக்கத்தக்கது. எனவே உண்மையில் பிரச்சினை இருக்கும் பட்சத்தில் அதற்காக உள்ள கூட்டமைப்பில் சங்கத்தின் மூலம் பேசி நல்ல முடிவு எடுக்க வழிவகை செய்ய வேண்டும்.

தவிர இதுபோன்ற சூழ்நிலையில் ஒற்றுமைக்கு விரோதமான செயல்களில் ஈடுபடாமல் இருப்பது நமது திரையுலக்கிற்கு செய்யும் மிகப்பெரிய நன்மையாகும்,” என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

Read Previous

‘புலி’ படத்தின் கதை என்ன ?

Read Next

ரயிலிலேயே படமாகும் ‘வைகை எக்ஸ்பிரஸ்’…

Most Popular