‘புலி’ படத்தின் கதை என்ன ?

vijay puli story newsவிஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், பிரபு மற்றும் பலர் நடிக்க சிம்புதேவன் இயக்கத்தில் தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் உருவாகி வரும் படம் ‘புலி’.

‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படத்தில் இயக்குனராக அறிமுகமான சிம்புதேவன் தொடர்ந்து வித்தியாசமான படங்களையே இயக்கி வருகிறார்.

முதன் முறையாக தமிழின் முன்னணி நடிகரான விஜய்யுடன் முதன் முறையாக இணைந்துள்ளார். இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள நட்சத்திரக் கூட்டமே படத்திற்கு எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தின் கதை என்னவாக இருக்கும் என்ற தகவல் ஓரளவிற்கு கசிந்துள்ளது. விஜய் இந்தப் படத்தில் ஓவியராக நடிக்கிறாராம். அவர் வரையும் ஓவியங்கள் அப்படியே உயிர் பெற்று அந்த ஓவியங்களுக்குள் ஒரு கதை உருவாகிறதாம்.

அப்படி உருவாகும் கதைகளில் விஜய் மொத்தம் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கிறாராம். இப்படி ஒரு விஷயம் நம் காதுகளில் விழுந்தவுடனேயே செய்தியாகக் கொடுத்து விட்டோம். இது எந்த அளவிற்கு உண்மை என்பதை படம் வெளியாகும் வரை பொறுத்திருந்து தெரிந்து கொள்ளுங்கள்…. !!!!!!!!!

Read Previous

Anirudh’s ‘Aakko’ Single Track Released

Read Next

‘லிங்கா’ பிச்சை போராட்ட விவகாரம், தயாரிப்பாளர் சங்கம் கண்டனம்