எஸ்.என்.சக்திவேல் இயக்கத்தில் ஏ 7 இசைக்குழு இசையமைக்க தீபக், நேகா, பாண்டியராஜன், சுப்பு பஞ்சு, மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், சென்ட்ராயன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சண்டி மற்றும் பலர் நடித்துள்ள ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ படத்தின் ‘ஃபர்ஸ்ட் கட்டிங்’ சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது.
சமீப காலமாக தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்து வரும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் பேசும் காமெடியான வசனங்களுடன் வந்த அந்த ‘ஃபர்ஸ்ட் கட்டிங்’ டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வேற்பு ஏற்பட்டுள்ளது.
சில நாட்களிலேயே 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் அந்த டீசரை யு டியூபில் கண்டு ரசித்துள்ளனர்.
இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.