‘சூப்பர் கேர்ள்’ கெஸான்ட்ரா…

super girl cassandraகல்லூரி மாணவர்களின் இசை வாழ்க்கையை மையாமாகக் கொண்டு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘வானவில் வாழ்க்கை’.

நடிப்பவர்களே பாடியும், பாடல்களுக்கு இசையை வாசித்தும் வெளிவரும் இந்த மியுசிக்கல் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகம் ஆகிறார் கெஸான்ட்ரா. பாடகி, நடிகை என தனது கலைப் பயணத்தை தொடங்கியிருக்கும் கெஸான்ட்ரா, தனது முதல் படம் பற்றிய அனுபவங்களைச் சொல்கிறார்….

“வானவில் வாழ்க்கை’ படத்தில் என் கதாபாத்திரத்தின் பெயர் வினிதா. இப்படத்தில் நான் பாடியுள்ள ‘Super Girl’ பாடல் அனைவரையும் கவரும். இப்பாடலுக்குப் பிறகு எனது நண்பர்கள் அனைவரும் என்னை ‘Super Girl’ என்றே அழைக்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதத்தில் நான் நடித்துள்ளேன் என்று நம்புகிறேன்.

இப்படத்தின் மூலம் தமிழை நன்றாகக் கற்றுக் கொண்டேன். நடிப்பு, நடனம் என எனக்கு அனைத்தையும் கற்றுக் கொள்ளும் விதமாய் இப்படம் இருந்தது. இந்த வாய்ப்பை அளித்த ஜேம்ஸ் சார் மற்றும் ஓசியானா ஏஜேஆர் சினி ஆர்ட்ஸ் நிறுவனத்துக்கும் எனது நன்றிகள். பாடுவதுதான் எனக்கு மிகப் பிடித்தமான விஷயம், நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் தொடர்ந்து நடிப்பேன்,” கொஞ்சும் தமிழில் கூறுகிறார் கெஸான்ட்ரா.

Read Previous

மாபெரும் தோல்விப் படமானது ‘ஷமிதாப்’…

Read Next

யுஎஸ் பாக்ஸ் ஆபீஸ் – ‘என்னை அறிந்தால்’ சாதனை…

Most Popular