யுஎஸ் பாக்ஸ் ஆபீஸ் – ‘என்னை அறிந்தால்’ சாதனை…

Yennai Arindhaal - Gallery 2_00019அஜித், அருண் விஜய், அனுஷ்கா, த்ரிஷா மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் யுஎஸ் பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது.

அங்கு இப்படம் 5,00,919 யுஎஸ் டாலர்களை வசூலித்து முந்தைய அஜித் படங்களின் சாதனையை முறியடித்திருக்கிறது. அது மட்டுமல்ல ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விக்ரம் ஆகியோரின் படங்களுக்குப் பிறகு அஜித் நடித்துள்ள ஒரு படமும் 5,00,000 யுஎஸ் டாலர் வசூலைக் கடந்துள்ளது.

நமது இந்திய ரூபாய் மதிப்பில் மொத்தம் 3 கோடி 10 லட்ச ரூபாய் அளவிற்கு இதுவரை வசூலாகியுள்ளதாம். வாங்கியத் தொகையை விட ‘என்னை அறிந்தால்’ படத்திற்கு அதிகமாகவே லாபம் கிடைத்துள்ளது என படத்தை வெளியிட்டுள்ள அட்மஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும்  ‘என்னை அறிந்தால்’ படம் சுமார் 45 கோடி ரூபாய் அளவிற்கு வசூலித்துள்ளதாக கோடம்பாக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read Previous

‘சூப்பர் கேர்ள்’ கெஸான்ட்ரா…

Read Next

மணிரத்னத்தின் ‘ஓகே கண்மணி’ ஏப்ரல் வெளியீடு