மார்ச் 1-ல் ‘உத்தம வில்லன்’ இசை விழா…

uttama-villain-audio-launch-newsரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் ஜிப்ரான் இசையைமப்பில் கமல்ஹாசன், ஆன்ட்ரியா, பூஜா குமார், கே.விஸ்வநாத், கே.பாலசந்தர் மற்றும் பலர் நடிக்கும் ‘உத்தம வில்லன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 1ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள உலக வர்த்தக மையத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

இந்த விழாவில் கமல்ஹாசன் உள்ளிட்ட படத்தில் நடித்துள்ள அனைத்து நட்சத்திரங்களும் கலந்து கொள்ள உள்ளார்கள்.

தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், திரையரங்க உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள், பத்திரிகை, தொலைக்காட்சி, ஊடக நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் முன்னிலையில் இசை வெளியீட்டு விழா நடைபெறுமென அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்திரைப்படம் ஏப்ரல் 2ம் தேதி வெளியாகும் எனத் தெரிகிறது.

Read Previous

பா.மீனாட்சி சுந்தரம் – புதிய பாடலாசிரியர்…

Read Next

வெளிநாடுகளிலும் ‘வானவில் வாழ்க்கை’…

Most Popular