‘காற்றின் தேசம் எங்கும் கானம் சென்று தங்கும்’ என்ற பாடல் வரிகளுக்கேற்ப முழுக்க முழுக்க இசையை மையமாக வைத்து இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘வானவில் வாழ்க்கை’.
இத் திரைப்படம் மார்ச் 13 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இசையில் கைதேர்ந்த இளைஞர்களைக் கொண்டு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கும் இப்படத்தில் மொத்தம் 17 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
“மொழி பேதமில்லாமல் அனைவருக்கும் சென்றடையும் ஒரு கலை இசை. சர்வதேச அளவில் மியுசிக்கல் படங்களுக்கு அதிக வரவேற்பு உண்டு.
அமெரிக்கா, கனடா, லண்டன், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளிலும் ‘வானவில் வாழ்க்கை’ மார்ச்13ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படம் உலகளாவிய ரசிகர்களையும் கவரும்,” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குனர் ஜேம்ஸ் வசந்தன்.