சிம்புவின் திரையுலக வாழ்க்கையில் மார்ச் மாதம் ஒரு முக்கிய கட்டமாக அமைய உள்ளது. அதை சிம்புவின் அடுத்த இன்னிங்ஸ் என்று கூட தாராளமாகச் சொல்லலாம்.
சிம்பு நடித்து தற்போது “வாலு, இது நம்ம ஆளு” ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளன. இதில் ‘வாலு’ படம் மார்ச் 27ம் தேதியும், ‘இது நம்ம ஆளு’ படம் கோடை விடுமுறையிலும் வெளியாக உள்ளது.
அதோடு மார்ச் மாதம் கௌதம் மேனன், சிம்பு இணைந்து சில நாள் நடந்த படத்தின் படப்பிடிப்பு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஆரம்பமாக உள்ளது. அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தை இயக்க வாய்ப்பு வந்ததால் அந்தப் படத்தை அப்படியே விட்டுவிட்டிருந்தார் கௌதம்.
செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள புதிய படத்தின் ஆரம்பக் கட்ட வேலைகளும் மார்ச் மாதம்தான் ஆரம்பமாக உள்ளனவாம்.
ஆக, வரும் மார்ச் மாதம் சிம்புவை மாற்றப் போகும் ஒரு மாதமாக அமையப் போகிறது. சிம்பு மாறுகிறாரா அல்லது சிம்புவால் மற்றவர்கள் மாறுவார்களா என்பதை அப்போதுதான் சொல்ல முடியும்.