மருதுபாண்டியன் இயக்கத்தில் பாபி சிம்ஹா, பிரபஞ்சேஸ்வரன், லிங்கா, சரண்யா மற்றும் பலர் நடித்துள்ள ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படம் கடந்த வாரம் 10ம் தேதியன்று வெளியானது.
திரையுலகத்தின் முன்னணி இயக்குனர்களான பாரதிராஜா, ராம், தியாகராஜன் குமாரராஜா, பாலாஜி தரணீதரன், நலன் குமாரசாமி உள்ளிட்டவர்களும், மீடியாக்களும் இந்தப் படத்தை பெரிதும் பாராட்டியுள்ளனர்.
வித்தியாசமான திரைப்படமாக வெளிவந்துள்ள இந்தப் படத்தை ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். தற்போது பலரின் வேண்டுகோளுக்கிணங்க படத்திலிருந்து 10 நிமிடக் காட்சிகளை நீக்கியிருக்கின்றனர். இதனால், படம் மேலும் விறுவிறுப்பாக நகரும் என படத்தின் இயக்குனர் மருதுபாண்டியன் தெரிவித்துள்ளார்.