இயக்குனராக மாறும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

தமிழ் சினிமாவில் இன்னுமொரு தயாரிப்பாளர் இயக்குநராக மாற உள்ளார். ‘அமைதிப் படை 2, கங்காரு’ ஆகிய படங்களைத் தயாரித்த இயக்குனர் சுரேஷ் காமாட்சி ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக மாற உள்ளார்.

“பாரதி கண்ணம்மா, மறுமலர்ச்சி” உள்ளிட்ட வெற்றிப் படங்கள் தந்த பங்கஜ் புரொடக்ஷன்ஸில் பணியாற்றியவர் சுரேஷ் காமாட்சி. அதன் பின் மணிவண்ணன் இயக்கிய ‘அமைதிப் படை 2’ மூலம் தயாரிப்பாளராக மாறினார். அடுத்த சமீபத்தில் வந்த ‘கங்காரு’ படத்தையும் தயாரித்தார்.

‘அத்தனைக்கும் ஆசைப்படு’ படத்தின் முன்னணி ஹீரோ ஒருவர் நடிக்க உள்ளார். நாயகியாக ‘கங்காரு’ படத்தில் நடித்த ப்ரியங்கா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் இயக்குனர் சுரேஷ் காமாட்சியும் நடிக்கிறார்.

தயாரிப்பாளராக இருந்து இயக்குனராக மாறியதைப் பற்றி சுரேஷ் காமாட்சி கூறுகையில்,

“நான் சினிமாவுக்கு வந்ததே இயக்குநராவதற்குத்தான். திடீரென நான் இயக்குனர் ஆகவில்லை. கொஞ்சம் தாமதமாக என் ஆசை நிறைவேறுகிறது. இந்தப் படம் முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளது.

இந்தப் படத்தை பாலச்சந்திரன் படைப்பகம் என்ற எனது இன்னொரு நிறுவனத்தின் சார்பில் தயாரித்து இயக்குகிறேன்,” என்றார் சுரேஷ் காமாட்சி.

இந்தப் படத்திற்கு சீனிவாஸ் இசையமைக்க, ராஜரத்தினம் ஒளிப்பதிவு செய்கிறார்.

அடுத்த வாரம் ஈரோடு மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

Read Previous

கமல் சார் ஆசிரியர், நான் மாணவன் – ஜிப்ரான்

Read Next

Papanasam – Official Trailer