“ராம், டிஷ்யூம், ஈ, தெனாவட்டு, சிவா மனசுல சக்தி, கோ, நண்பன், என்றென்றும் புன்னகை” போன்ற பல படங்களிலும், ஷங்கர், அமீர், ராஜேஷ், எஸ்.பி.ஜனநாதன் போன்ற முன்னணி இயக்குனர்களின் படங்களிலும் நடித்துள்ள ஜீவா, ‘ஈ’ படத்திற்கு பிறகு நயன்தாராவுடன் மீண்டும் இணைந்து நடிக்கும் படம் ‘திருநாள்’.
கடந்த சில மாதங்களாக பல கதைகளைக் கேட்டும் திருப்தியடையாத ஜீவாவை, இப்படத்தின் கதை வெகுவாக கவர்ந்ததால், உடனடியாக இப்படத்தின் படப்பிடிப்பை துவங்குமாறு இயக்குனரிடம் கூறியுள்ளார். மேலும், ‘தெனாவட்டு’ படத்திற்கு பிறகு, இப்படத்தில் கிராமத்து இளைஞனாக ஜீவா நடிக்க உள்ளார்.
தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, இப்படத்தின் கதையைக் கேட்ட உடனேயே நடிக்க சம்மதம் தெரிவித்து, தனது பிசியான கால்ஷீட்டில் தேதிகளை அட்ஜெஸ்ட் செய்து படத்திற்காக வழங்கியுள்ளார்.
நகைச்சுவையும், காதலும், ஆக்ஷனும் சரி விகிதத்தில் கலந்த இப்படத்தை P.S.ராம்நாத் இயக்க உள்ளார்.
இப்படத்தை கோதண்டபாணி பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் மூலம் எம்.செந்தில்குமார் தயாரிக்கிறார்.
‘திருநாள்’ படத்தின் படப்பிடிப்பு கும்பகோணத்தில் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற உள்ளது. இதற்காக கும்பகோணத்தில் பிரம்மாண்டமான செட் ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது.