‘இனிமே இப்படித்தான்’ எனக்கொரு மேஜிக் – சந்தோஷ் தயாநிதி

சந்தானம், ஆஷ்னா சவேரி, அகிலா கிஷோர் மற்றும் பலர் நடிக்கும் ‘இனிமே இப்படித்தான்’ படத்தின் இசை வெளியீடு இன்னும் சில மணி நேரங்களில் நடைபெற உள்ளது.

முருகானந்த் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சந்தோஷ் தயாநிதி இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இப்படத்தின் தயாரிப்பாளரான சந்தானம், சந்தோஷை சந்தோஷத்துடன் அறிமுகப்படுத்துகிறார்.

‘நான் ரகுமான் சாருடன் ‘கடல்’ படத்திலிருந்து ‘காவியத் தலைவன்’ படம் வரை அவர் கிட்ட கீ-போர்ட் புரோகிராமரா பணியாற்றியிருக்கிறேன். அத்துடன் அவருடைய இசைக் கல்லூரியிலும் படித்திருக்கிறேன்.

அந்த ஒரு அறிமுகத்துல சந்தானம் சார் என்னைக் கூப்பிட்டுப் பேசினாரு. உடனே எனக்கு ‘இனிமே இப்படித்தான்’ படத்துக்கு இசையமைக்க வாய்ப்புக் கொடுத்தாரு. அவர் கிட்ட நான் எந்த டெமோவும் கொடுக்கலை, எதுவும் கேக்காமலே எனக்கு வாய்ப்புக் கொடுத்துட்டாரு. இப்ப நினைச்சாக் கூட அது எனக்கு ஒரு மேஜிக் மாதிரிதான் இருக்கு.

என் மேல நம்பிக்கை வச்சி இந்த வாய்ப்பைக் கொடுத்தாரு, இந்தப் படம் ஒரு ரொமான்டிக் காமெடி. அனைத்துப் பாடல்களையும் பெப்பியா பண்ணியிருக்கோம்.

கபிலன், உமாதேவி, கானா வினோத், கானா பாலா பாடல்களை எழுதியிருக்கிறார்கள். கார்த்திக், ஹரிணி உட்பட சில புதுமுகங்களுக்கும் வாய்ப்புக் கொடுத்திருக்கேன்.

சந்தானம் சாருக்கு இந்தப் படம் புது பிளேவர்ல இருக்கும். கரெக்டான ஒரு மெலடியைப் பிடிச்சிட்டோம்னா, அதுக்கப்புறம் அரேஞ்ச்மென்ட்ஸ்ல இன்னும் நாம அசத்த முடியும்.

என்னை அறிமுகப்படுத்தின சந்தானம் சாருக்கு மிகப் பெரிய நன்றி சொல்லணும். இந்த வாய்ப்பு எனக்கு மிகப் பெரிய பரிசு. சந்தானம் சாரை எல்லாரும் ஒரு காமெடியனாதான் பார்த்திருக்கோம். ஆனால், அவருக்கு நல்ல மியூசிக் சென்ஸ் உண்டு. அவருக்கு மெலடி ரொம்ப பிடிக்கும், அவர் கூட பணியாற்றியது ரொம்ப வித்தியாசமான அனுபவம்.

ஒரு பாடல் என்னதான் ஸ்டைலா இருந்தாலு அதுல ஒரு மெலடி இருக்கணும். இதைத்தான் நான் ரகுமான் சார் கிட்ட இருந்து கத்துக்கிட்டேன். இன்னும் சில மணி நேரங்கள்ல திரையுலகத்துல இருக்கிற முக்கியமான விஐபிக்கள் என்னோட இசையை வெளியிடப் போறாங்க, ரொம்ப ஆர்வத்தோட காத்துக்கிட்டிருக்கேன்,” என சந்தோஷத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார் சந்தோஷ் தயாநிதி.

Read Previous

‘மதுரை மாவேந்தர்கள்’-ஐ மிரட்டிய கடல்

Read Next

Inimey Ippadithan – Official Trailer

Most Popular