‘எந்திரன், ஐ’ சாதனையை முறியடிக்கும் ‘பாகுபலி’

தமிழ், தெலுங்கில் வெளிவந்துள்ள ‘பாகுபலி’ படத்தின் வசூல் இதுவரை வெளிவந்துள்ள இந்தியப் படங்களின் வசூலில் ஒரு புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளதாக பாலிவுட், டோலிவுட், கோலிவுட், சான்டல்வுட், மல்லுவுட் ஏன் ஹாலிவுட்டில் கூட பேசப்பட்டு வருகிறதாம்.

ரஜினிகாந்த் – ஷங்கர் கூட்டணி புரிந்த சாதனை, சல்மான் கான், ஷாரூக் கான், ஆமீர் கான் என இந்தியத் திரையுலகில் இதுவரை வசூல் சக்கரவர்த்திகளாக இருந்த அனைவரது படங்களின் வசூலையும் ‘பாகுபலி’ மூன்றே நாட்களில் முறியடித்துவிட்டது என்கிறார்கள்.

ஆந்திரா, தெலுங்கானா ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டும் மூன்று நாட்களில் 54 கோடி ரூபாயும், தமிழ்நாட்டில் 16 கோடி, கர்நாடகாவில் 21 கோடி, கேரளாவில் 3 கோடி, மற்ற இந்திய மாநிலங்களில் 33 கோடி, வெளிநாடுகளில் 35 கோடி ரூபாய் என மொத்தமாக சுமார் 160 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னதாக தென்னிந்திய அளவில் ஷங்கர் இயக்கி ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடித்த ‘எந்திரன்’ திரைப்படம் மொத்தமா 290 கோடி ரூபாய் வசூலித்திருந்தது. அடுத்து ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடித்த ‘ஐ’ படம் 220 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது.

இந்த இரண்டு சாதனைகளையும் ‘பாகுபலி’ படம் முறிடியத்து 300 கோடி ரூபாயைத் தாண்டும் புதிய வசூல் சாதனையை விரைவில் படைக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ரீதியிலேயே படம் வசூலித்து வந்தால் மொத்த வசூலாக எப்படியும் 500 கோடி ரூபாய் கூட வந்து விடும் என ஆச்சரியப்படும் ஒரு தகவலையும் சொல்கிறார்கள்.

 

Read Previous

Vijay Tv – ‘Kalakka Povathu Yaaru’ is back…

Read Next

எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவு