ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் மற்றும் பலர் நடித்த ‘மெர்சல்’ படம் கடந்த வருடம் வெளிவந்தது.
அந்தப் படத்தில் ரகுமான் இசையில் விவேக் எழுதிய அனைத்துப் பாடல்களுமே சூப்பர் ஹிட்டானது. இப்போது தமிழ்த் திரையுலகத்தில் இதுவரை எந்த ஒரு படமும் புரியாத சாதனையை ‘மெர்சல்’ படைத்துள்ளது.
‘மெர்சல்’ படப் பாடல்கள் 35 கோடி பார்வையைப் பெற்றுள்ளது. இப்படத்தில் இடம் பெற்ற ‘ஆளப் போறான் தமிழன்’ பாடல் மட்டுமே 7 கோடி பார்வையைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
படம் வெளிவந்து ஒரு வருடம் ஆக உள்ள நிலையில் தற்போதும் இப்படத்தின் பாடல்களை ரசிகர்கள் ரசித்து வருகிறார்கள்.