மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ள ‘தனி ஒருவன்’ திரைப்படத்திற்கு தணிக்கைக் குழுவினர் அனைவரும் பார்க்கும்படியான ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
சுமார் 3 வருட இடைவெளிக்குப் பிறகு ராஜா இயக்கி வெளிவர உள்ள படம் இது. அண்ணன் ராஜாவும், தம்பி ரவியும் கடைசியாக இணைந்த ‘தில்லாலங்கடி’ படம் வெளிவந்து 5 வருடங்களாகிவிட்டது.
ஜெயம் ரவி நடித்து கடைசியாக வெளிவந்த ‘ரோமியோ ஜுலியட், சகலகலா வல்லவன்’ ஆகிய படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன. இப்போது அந்த வரிசையில் ‘தனி ஒருவன்’ படமும் சேரும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக எழுந்துள்ளது.
இந்த மாதம் 28ம் தேதி இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.