செப்டம்பரில் ‘சவுகார் பேட்டை’

மாபெரும் வெற்றி பெற்ற மைனா, சாட்டை, மொசக்குட்டி படங்களை தொடர்ந்து ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பாக ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘சவுகார் பேட்டை’.

தமிழில் ‘சவுகார் பேட்டை’ , ஹிந்தியில் ‘பேகம் பேட்டா’, தெலுங்கில் ‘தந்திர சக்தி’ என்ற பெயரில் ஸ்ரீகாந்த் – ராய் லட்சுமி இருவரும் இணைந்து நடிக்கும் இந்த படம் மூன்று மொழிகளில் மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

மற்றும் சுமன், கஞ்சா கருப்பு, வடிவுக்கரசி, சரவணன், மனோபாலா, விவேக், அப்புகுட்டி, கோட்டாசீனிவாசராவ், தலைவாசல் விஜய், சம்பத், கோவை சரளா, பவர் ஸ்டார் சீனிவாசன், சிங்கம் புலி, நான் கடவுள் ராஜேந்திரன், டி.பி.கஜேந்திரன், ரேகா, ஆர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.

“இதுவரை பார்த்த ஸ்ரீகாந்த் – ராய் லட்சுமி இருவரையும் இப்படம் வேறுபடுத்திக் காட்டும் படமாக இருக்கும். பேய் கதைதான், ஆனால் வேறு மாதிரியான உணர்வை இந்தப் படம் தரும்,” என்கிறார் இயக்குனர் வடிவுடையான்.

செப்டம்பர் மாதம் மூன்று மொழிகளிலும் வெளிவர உள்ளது ‘சவுகார் பேட்டை’.

Read Previous

Asin to get wedlocked

Read Next

ஆகஸ்ட் 21-ல் ‘ஜிகினா’ ரிலீஸ்…

Most Popular