மயில் தேவர் பிலிம்ஸ் சார்பாக Dr.K.C.பிரபாத் தயாரிக்கும் படம் ‘மருதாண்ட சீமை’.
‘அரும்பு மீசை குறும்புப் பார்வை, வெண்நிலா வீடு’ ஆகிய படங்களை இயக்கி வெற்றி மகாலிங்கம் இந்தப் படத்தை இயக்க உள்ளார்.
விருதுநகர் மாவட்டம், மதுரை மாவட்டம், சிவகங்கை மாவட்டம், இராமநாதபுரம் மாவட்டம் இந்த நான்கு மாவட்டங்களும் சந்திக்கும் இடத்தில் வாழும் மக்களின் வாழ்வியலை தனது மூன்றாவது படமான மருதாண்ட சீமை’யில் பதிவு செய்ய இருக்கிறாராம் இயக்குனர் வெற்றி மகாலிங்கம்.
இந்தப் படத்தில் முன்னனி தொழில்நுட்பக் கலைஞர்களும், பிரபல நடிகர்- நடிகைகள் நடிக்கவிருக்கிறார்கள்.
படப்பிடிப்பு தென் மாவட்டங்களில் ஒரே கட்டமாக நடந்து முடியவிருக்கிறது. இரண்டு பாடல் காட்சிகளை வெளிநாட்டில் படமாக்க உள்ளார்களாம்.