‘ரஜினி முருகன்’ செப்டம்பர் 17 ரிலீஸ்…

திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் இமான் இசையமைப்பில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘ரஜினி முருகன்’.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான பொன்ராம்- இமான் – சிவகார்த்திகேயன் மீண்டும் இணந்துள்ள ‘ரஜினி முருகன்’ படம் பற்றிய அறிவிப்பு வெளியான உடனே எதிர்பார்ப்பும் அதிகமாகிவிட்டது.

ஜுன் மாதம் இப்படத்தின் இசை வெளியிடப்பட்டது. படத்தின் பாடல்களும் ஏற்கெனவே ஹிட்டாகியுள்ள நிலையில் படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

படத்தின் இறுதிக் கட்ட வேலைகள் தற்போது நடந்து வருகின்றன. இதனிடையே செப்டம்பர் 17ம் தேதி படத்தை வெளியிட உள்ளார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்ச்சியாக வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் சிவகார்த்திகேயனக்கு ‘ரஜினி முருகன்’ மேலும் ஒரு வெற்றிப் படமாக அமையும் என்றே திரையுலகினரும், ரசிகர்களும் கருதுகிறார்கள்.

Read Previous

Kabali first look, fans rock

Read Next

அப்பாதான் மகன்களுக்கு ஹீரோ – சந்தானம்

Most Popular