அப்பாதான் மகன்களுக்கு ஹீரோ – சந்தானம்

ஆப்கன் பிலிம்ஸ் தயாரிப்பில் பழம பெரும் இயக்குனர் கே.விஜயனின் பேரன் விக்னேஷ் மேனன் இயக்கியுள்ள படம் ‘அசுர குலம்’.

ஸ்டன்ட் இயக்குனர் பெப்ஸி விஜயன் மகன் சபரீஷ் நாயகனாக நடிக்க, வித்யா நாயகியாக நடிக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது. டிரைலரை நடிகர் பிரபு வெளியிட இசையை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டார்.

விழாவில் நடிகர் சந்தானம் கலந்து கொண்டு பேசியதாவது,

”இப்படத்தின் நாயகன் சபரிஷுடன் நான் ஏற்கெனவே ‘மார்க்கண்டேயன்’ படத்தில் நடித்திருக்கிறேன். ஆனால், இந்தப் படத்தில் நான் நடிக்கவில்லை, இருந்தாலும் அன்புக்காக வந்திருக்கிறேன்.

‘மார்க்கண்டேயன்’ படத்தை ஒரு காட்டில் எடுத்தோம். வீரப்பன் கூட நுழையமுடியாத காடு அது. அங்கு டாய்லட் கட்டி மின் சாரம், ஏசி என்று எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார் மாஸ்டர்.

பத்துமாதம் சுமந்து அம்மா பெற்றாலும் எல்லாருக்கும் ரோல் மாடல் அவரவர் அப்பாதான். எங்கள் அப்பா குடிக்க மாட்டார், புகை பிடிக்க மாட்டார், அவர் ஒரு பில்டிங் காண்ட்ராக்டர். இருந்தாலும் தன்னிடம் வேலை பார்ப்பவர்களிடம் ஜாலியாக அரட்டை அடிப்பார். அவர்தான் என் முதல் ஹீரோ. சபரிஷுக்கு நல்ல அப்பா, கிடைத்து இருக்கிறார். சபரிஷுக்குத் துணை நிற்போம். என்னை ரசிக்கும் ரசிகர்கள் என் தம்பி சபரிஷ் படத்தையும் பார்க்க வேண்டும்,” என்று சந்தானம் பேசினார்.

விழாவில் நடிகர் பிரபு, இயக்குனர் பி.வாசு, தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் பி.எல் தேனப்பன், ராதாகிருஷ்ணன். கதிரேசன், விநியோகஸ்தர் சங்கத்தலைவர் அருள்பதி, திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன், நடிகர்கள் தம்பி ராமையா, ஜான்விஜய், விடிவி கணேஷ், இசையமைப்பாளர் சி.சத்யா, நாயகி வித்யா, ‘மஞ்சப்பை’ இயக்குநர் ராகவன், ‘அசுர குலம்’ தயாரிப்பாளர் வேம்பையன் வேலாயுதம், இயக்குநர் விக்னேஷ் மேனன் ஆகியோரும் பேசினார்கள். முன்னதாக தயாரிப்பாளர் சரவணன் கணேசன் வரவேற்புரை ஆற்றினார்.

Read Previous

‘ரஜினி முருகன்’ செப்டம்பர் 17 ரிலீஸ்…

Read Next

Sivakarthikeyan’s special from 17 September

Most Popular