உதயநிதி புதிய படம் ஆரம்பம்…

பல வெற்றிப் படங்களை வினியோகம் செய்தும் தயாரித்தும் உள்ள ரெட் ஜெயன்ட் மூவீஸ் தற்போது உதயநிதி ஸ்டாலின், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் ‘கெத்து படத்தைத் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தை ‘மான் கராத்தே’ படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தையடுத்து ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிக்கம் புதிய படத்தின் பூஜை இன்று நடந்தது. ‘என்றென்றும் புன்னகை’ படத்தை இயக்கி அகமது இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா, பிரகாஷ்ராஜ், ராதாரவி, விவேக் மற்றும் பலர் நடிக்க உள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஏற்கெனவே இப்படத்தின் பாடல் பதிவு ஆரம்பமாகிவிட்டது.

ஹிந்தியில் வெளிவந்து வெற்றி பெற்ற ‘ஜாலி எல்எல்பி’ படத்தின் ரீமேக்காக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பிற்காக பிரம்மாண்டமான நீதிமன்ற செட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில் இன்று ஆரம்பமான படப்பிடிப்பு தொடர்ந்து பொள்ளாச்சி, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் நடக்க உள்ளது.

இன்று நடைபெற்ற பூஜையில் உதயநிதி ஸ்டாலின், பிரகாஷ்ராஜ், விவேக், படத்தின் ஒளிப்பதிவாளர் மதி உள்ளிட்ட படக் குழுவினரும் மற்றும் திரையுலகப் பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

Read Previous

What Rajini said ?

Read Next

‘வினாயகர்’ சதுர்த்தியன்று வரும் ‘ரஜினி முருகன்’…

Most Popular