‘வினாயகர்’ சதுர்த்தியன்று வரும் ‘ரஜினி முருகன்’…

சிவகார்த்திகேயன், வினாயகர், முருகன் ஒன்றுக்கொன்று தொடர்புடைய விதத்தில் வினாயகர் சதுர்த்தி தினத்தன்று ‘ரஜினி முருகன்’ படம் திரைக்கு வர உள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முருகனின் மறு பெயர் கார்த்திகேயன், சிவகார்த்திகேயன் என்றால் சிவனின் மகன் என்றும் பொருள் கொள்ளலாம். அந்த சிவகார்த்திகேயன் நடித்துள்ள பெயரில் முருகனைக் கொண்டுள்ள ‘ரஜினி முருகன்’ படம், முருகனின் அண்ணனான வினாயகர் பிறந்த தினத்தன்று வெளி வருவது எவ்வளவு பொருத்தம்.

ரசிகர்களிடத்திலும், திரையுலகத்தினரிடமும் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ரஜினி முருகன்’ படத்தை பொன்ராம் இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

செப்டம்பர் 17 வினாயக சதுர்த்தியன்று வருகிறார் ‘ரஜினி முருகன்’…

 

Read Previous

உதயநிதி புதிய படம் ஆரம்பம்…

Read Next

Vedhika in ‘Vinodhan’…

Most Popular