‘தனி ஒருவன்’ ரீமேக்கில் நடிக்க கடும் போட்டி

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, நயன்தாரா நடித்த ‘தனி ஒருவன்’ திரைப்படம் கடந்த மாதம் 28ம் தேதி வெளிவந்தது.

பட வெளியீட்டிற்கு முன் எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல் சாதாரண படங்களைப் போலவே வெளிவந்த இந்தப் படம் அசாத்தியமான சாதனையைப் படைத்து வருகிறது.

இதற்கு முன் ஜெயம் ராஜாவும், ஜெயம் ரவியும் ரீமேக் படங்களில் மட்டுமே இணைந்து வெற்றியை பெற்று வந்தனர். முதன் முறையாக இருவரும் இணைந்த நேரடிப் படத்தின் வெற்றி இப்போது மற்ற மொழியினர் படத்தின் ரீமேக் உரிமையை போட்டி போடும் அளவிற்கு உயர்ந்துள்ளது.

தெலுங்குத் திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் இந்தப் படத்தைப் பார்த்து ரசித்துள்ளனர். அவர்களில் முன்னணி நடிகர்களாக இருக்கும் மகேஷ் பாபு, ராம் சரண் இருவருமே படத்தின் ரீமேக்கில் நடிக்க அதிக ஆர்வத்துடன் உள்ளனராம்.

அவர்களில் யாராவது ஒருவரை நடிக்க வைப்பதற்காக தற்போது படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமைய வாங்க கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாம்.

ரீமேக் உரிமை முறைப்படி விற்கப்பட்ட பிறகே மற்ற விவரங்கள் தெரிய வரும்.

Read Previous

Maiem – Official Trailer

Read Next

‘ரஜினி முருகன்’ படத்திற்கு நாளை ‘சென்சார்’…