சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சமுத்திரக்கனி, சூரி மற்றும் பலர் நடித்துள்ள ‘ரஜினி முருகன்’ படம் அடுத்த வாரம் 17ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
இந்தப் படத்திற்கு நாளை சென்சார் நடக்க உள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிவகார்த்திகேயன் – பொன்ராம் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளதால் இந்தப் படம் ஆரம்பமான நாளிலிருந்தே மிகவும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன் வெளிவந்த டிரைலருக்கும் ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்துள்ளார்கள்.
சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களை விட இந்தப் படம் வசூல் சாதனை புரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.