‘அம்மணி’ படம் பற்றி அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வந்தது.
“ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே” படங்களுக்குப் பிறகு லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள படம் இது. கே இசையமைக்கும் இந்தப் படத்தில் சுப்புலட்சுமி, லட்சுமி ராமகிருஷ்ணன், நிதின் சத்யா, ஜார்ஜ், ஸ்ரீ பாலாஜி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
தற்போது இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில் ‘அம்மணி’ திரைக்கு வரத் தயாராக உள்ளது.
வித்தியாசமான கதைக் களம், நேர்த்தியான படப்பிடிப்பு என எல்லா அம்சங்களும் பொருந்திய ‘அம்மணி’ படம் தயாரிப்பாளர் வெண் கோவிந்த்துக்கு நல்ல பெயர் பெற்றுத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘’அம்மணி’ என் வாழ்வில் மறக்க முடியாத படமாக இருக்கும். என்னுடைய இந்தக் கதையை கேட்ட உடனே படமாக்க முன் வந்த தயாரிப்பாளர் வெண் கோவிந்த் சாருக்கு நன்றி. அவருடைய ஒத்துழைப்பால் தான் படமும் குறிப்பிட்ட நேரத்தில், தரமான படமாக தயார் ஆகியுள்ளது.
‘அம்மணி’ என் நெஞ்சில் ஆழமாகப் பதிந்த ஒரு கதை, நிச்சயம் பேசப்படும் படமாக இருக்கும்,” என்கிறார் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன்.