பகல் காட்சிகள் முதல் ‘புலி’ ரிலீஸ்…

‘புலி’ படம் திட்டமிட்டபடி இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

நேற்று வருமான வரித் துறையினர் ‘புலி’ படத் தயாரிப்பாளர்கள், விஜய் ஆகியோரது வீட்டில் நடத்திய சோதனையைத் தொடர்ந்து படம் இன்று வருமா வராதா என்பது சந்தேகமாக இருந்தது.

நேற்று இரவு முதல் ஆரம்பமான பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து சற்று முன்னர் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டு ‘புலி’ படம் இன்று காலை காட்சி முதல் திரையிடப்பட உள்ளது.

அதே சமயம், விடியற்காலை காட்சிகள், காலை 8 மணிக்கு திரையிடப்படுவதாக இருந்த காட்சிகள் மட்டும் இன்று ரத்தாகின.

காலையிலேயே படத்தைப் பார்க்க முடியாமல்  விஜய் ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்னர். சில ஊர்களில் தியேட்டர்கள் முன் விஜய் ரசிகர்கள் ஆர்பாட்டம் நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘புலி’ படம் கடைசி நேர சிக்கலில் மாட்டிக் கொண்டது திரையுலகத்தினருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Read Previous

Kathukkutty – Trailer

Read Next

Puli – Review